Thursday, July 9, 2020

காதல்

நேசங்கள் பொய்யாவதில்லை
உண்மை இதயங்கள் 
பழகும்போது 
நம்பிக்கைகள் 
வீணாவதில்லை 
கடவுள் மீது பக்தியாகும்போது !
நீ ....
எனக்கென 
பிறந்துவிட்டாய்
நான் உனக்கெனவெ
ஜென்மங்கள் எல்லாம் 
எடுத்துவிட்டேன் 
புரிதலின் 
தெரிதலால் ....! 
காலங்கள் எல்லாம்
காதல் செய்வோம் 
ஜெகத்தினில் 
உண்மையாய் 
உயிராய் 
வாழ்வோம் 
அன்பே பிரியமுடன்

Monday, July 6, 2020

நட்பு

கவிதையை நேசிக்க நான் ஒன்றும் கவிஞன் அல்ல,
இரு விழிகளின் மேல் கொண்ட நட்பினால் கவிதையை நேசித்தேன்,
அந்த விழிகளுக்காக எழுதிக் கொண்டு இருப்பேன் என் உயிர் மூச்சு இருக்கும் வரை,
  நட்பு

காதல் பிரிவு

கவிதையை மட்டும் நேசித்த நான் காதலை நேசிக்கவில்லை என பிரிந்து சென்று விட்டாள்,
பிரிந்தவலுக்கு தெரியவில்லை நான் நேசித்த முதல் கவிதையே அவள் தான் என்று,

காதல்


மல்லிகைத் தோட்டத்தில் மலரின் வெள்ளை அழகு
மௌனத் தோட்டத்தில் உன்புன்னகை கொள்ளை அழகு
விழித்தோட்டத்தில் நீ சொல்லும் காதல் அழகு
மனத்தோட்டத்தில் நீ வந்து போவது அழகு

வசந்த கால மேகங்கள்


வானில் தவழும் மேகங்கள்
விதவிதமான 
வடிவங்கள்
மனதைக்
கவரும்
உருவங்கள். 
கடவுள் வரைந்த
ஓவியங்கள்.
கற்பனை தூண்டிடும்
காவியங்கள்.
மலரோடு
பேசிடும் முகில்கள்
முகில்களைப்
பார்த்து மகிழ்ந்திடும்
மயில்கள்.
மயில்களைப் பார்த்து
மகிழ்ந்திடும் மனிதர்கள்

சதுரங்க வேட்டை


கவிவிழியாள் காந்திமதி
---------------'-----------------------------

*சதுரங்க வேட்டை*
 
ஆடுபவர்: *கவிவிழியாள் காந்திமதி*

எதிரிகளைச்
சந்தித்து சிந்தித்து
 விளையாடும்
 விளையாட்டு..
பலமான
 யானையையும் பதறாமல் 
வேட்டையாடி
வீழ்த்த முடியும்..
சிப்பாய்களின் அரணும் சுழன்றுசுழன்று
அடிக்கும் 
குதிரையின் வீரமும்
 விளையாட்டில் ஆரம்பம்..
ராஜாவின் பாதுகாப்பும்
 ராணியின் ஆக்கிரமிப்பும் விளையாட்டில் உச்சகட்டம்...
மதியை விதியால் வெல்லும்
வெற்றி தோல்வி
 நம் கைகளிலே
துணிந்து  *விளையாடு* 
*வேட்டையாடு*
*வெற்றியோடு*

கவிஞர் கவிவிழியாள் காந்திமதி

《《☆ *B l a c k r o s e F a i s a l * ☆》》

நினைவுகளில்
மலர்கிறாய்
இதழ்களில்
புன்னகையால்
விரிகிறாய்
நேசத்தில்
நெஞ்சமெல்லாம்
சுவாசமாகிறாய்

நேசித்தாய்
உன்னால் என் 
உணர்வுகளும்
எனக்காகவே
ப்ரியப்பட்டது

காதல் செய்தாய்
உன் காதலுக்காகவே
என் உயிர்கூட
கொஞ்சம் அழகாக
ஒப்பனை செய்துகொண்டது

கவிதை சொன்னாய்
உன் ரசனை கேட்ட
என் வெட்கம் கூட
நிறையவே சிவந்து போனது

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
என் ஜென்மம் கூட
மீண்டும் பிறந்து
உன் காதலில்
குழந்தையாய் தவழ்ந்த போது
என்னையே நான்
படித்தேன்
எனக்குள் நீயும் கூட
ஒரு காவிய புத்தகமானாய்

இன்று உன் அனைத்துமே
எனக்குள் நினைவுகளால்
மட்டுமே நிரம்பி வழிகின்றது
நிஜத்தில் நிழல்போல்
தொடர்வேன் என்ற உன் அந்த
உயிர் வார்த்தைகள்
நான் சுவாசிக்கும்
காற்றில் கூட காண்வில்லையே

மிகவும் தொலைவில்
தொலைத்தது உன்னை
நானா...!
இல்லை நீயே என்னை தொலைத்து
சென்றாயா...?

தேடி பார்க்கின்றேன்
உன்னையும் என்னையும்
காற்றின் இடைவெளிகளிலும்
கடல் அலையின் நிறங்களிலும்....

              முற்றும்
❪❂❫━━━━━━━━‼️
《《☆ *B l a c k  r o s e  F a i s a l * ☆》》

நிலவுமகள்

ஐஸ் கிரீம்
நீ அல்ல
நான்தான்

உன்னைக் கண்டதும்
உருகுவதால் 

சிலை
நீ அல்ல
நான்தான்

உன் எழில் கண்டு
சிலையாவதால்

மலர் 
நீ அல்ல
நான்தான்

நீ இன்றி
வாடுவதால்

மான் 
நீ அல்ல
நான்தான்

உன் கடைக்கண்
பார்வை பட்டதும்
துள்ளி ஓடுவதால்

தேன் 
நீ அல்ல
நான்தான்

என் கனவுகளுக்கு
நீ
 தீ வைப்பதால்

நிலா
நீ அல்ல
நான்தான்

காதல் எனும் களங்கம் 
என் மனதில்
உள்ளதால்

மேகம்
 நீ அல்ல
நான்தான்

உனக்காக
கண்ணீர் மழை
பொழிவதால்

கவிஞர் புதுவை குமார்

தாய்


கருவறையில் இருந்து 
    கல்லறை வரை உன்மேல் 
சுயநலமில்லாமல் காதல் 
     செய்பவள் தாய்
  தாயின்றி நீயில்லை நானில்லை பிரபஞ்சமும்
   இல்லை நீரின்றி இயங்காது பூமி தாயின்றி 
     இயங்காது குடும்பமும் 
 வாழ்வும்

பெண்

கன்னத்துக் குழியழகி
கார்குழல் கூந்தலழகி
கிளி பேச்சழகி
கீரை உடம்பழகி
குயிலின் குரலழகி
கூழாங்கல் குணத்தழகி
கெண்டைமீன் கண்ணழகி
கேள்வியின் விடையழகி
கைப்பேசி மொழியழகி
கொண்டைப் பூவழகி
கோடிகளில் நீயே அழகி
கெளரவமாக சொல்வேன்
நீதான் என் எண்ணத்தழகி*!!!!

காதல்

💞பூட்டிருக்கும் இதயத்தில்
காத்திருக்கும் கனவுகள்,
அன்பு கொண்ட என் நெஞ்சத்தில் உன் நேசத்தின் நினைவுகள்..

என்றும் அழியாத கல்வெட்டு நம் காதல்..💞

வெற்றிவிழா

கவிஞர் சங்கமம் 6
5/6/20
வெற்றிவிழா
 கவிஞர் காந்திமதி
------------------------------------------
 கவிதையின் தலைப்பு।    *வெற்றி விழா*


சுற்று முற்றும்
 சிந்தையைக் கவரும்
முத்து முத்தான
 கவிதைச் சரங்களே!
உன்பிறப்பு எண்ணில்
அடங்காத் தொகுப்பு!
தினமும் கொடுக்கப்படும் 
 புதுப்புது *தலைப்பு*!
எங்கள் உள்ளத்
தவிப்புகளின் *பிரதிபலிப்பு!*
 உன்னால் உருவானோம் நாங்கள்!
எங்களால் உருவானாய் நீ !
உன் புகழை
தினம் பாடி
கவிமாலை தீட்டி
 பாமாலை சூட்டி
*வெற்றி விழா* 
காண வாழ்த்துகிறோம்!
வாழ்க கவிஞர் சங்கமம்!
 வளர்க கவிஞர்கள்!!
--------------------------------------------
கவிஞர் கவிவிழியாள் காந்திமதி

Sunday, July 5, 2020

நட்பு

வாழ்க்கை ஒரு மனிதருக்கு கற்பித்த பாடம் நட்பு மற்றும் காதல்,
காதலினால் நட்பை இழந்தவர்கள் பலர் ஆனால் நட்பினால் ஒருவரும் காதலை இழந்தது இல்லை,
வாழ்க்கையில் ஒரு துயரம் என்றால் முதலில் தெரிய படுத்துவது நட்பிடம் தான் காதலிடம் அல்ல,
 நட்பு.

மௌனம்

அறியாத வயதினில் புரியாத புதிர்கள் போல அன்று என்னால் ஏற்பட்ட குழப்பத்திற்கு கிடைத்த பரிசு உன் மௌனம்,
அன்று நட்பிற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத நான் உனது நட்பை இழந்து இத்தனை வருடங்களாய் காத்திருந்தேன் நீ மௌனம் திறவாய் என,

Saturday, July 4, 2020

எதிர்பார்ப்பு

உன் நினைவோடு 
             கண்ணீர் சிந்தும் 
இந்த அழகிய 
        இரவு பொழுதுகளிலும்
 உரக்கம் இல்லாமல்
                   விடியுமா என்ற
 எதிர்ப்பார்ப்போடு 
           உன்  வருகைக்காக
 காத்திருந்தேன்  என்
            விழியோரம் வடியும்  
 கண்ணீரில் என்
         உறக்கத்தை  கலைத்த
 வன்னம்....... 

நினைவுகள்


விழியோர நீர்துளிக்கும் 

இதழோர புன்னகைக்கும் 

பேரலையாய் ஆர்ப்பரிக்கும் மனதிற்கும்

உனதன்பை உணர்த்தி கொண்டிருக்கும்
இத் தனிமைக்கும்

உன் நினைவுகளின்
துணை ஒன்றே போதும் 💕💕

நினைவு


உன்னை நினைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இனிப்பாய் இருக்கிறது... நீயும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாய் என நான் நினைத்துக் கொள்வது!

காதல்


நட்பினால் மலர்ந்த மலர்கள் அன்பினால் கவிபாடும் காதலில் விழித்துக் கொண்டது,

சந்தேகம்

வானில் இருக்கும் விண்மீன்கள் ஒரு தவறு செய்தால் வானம் அவற்றை வெறுத்து ஒதுக்க போகிறதா என்ன,
என்றோ ஓர் நாள் நான் செய்த தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனை தேவையா,
காதலில் சந்தேகம் எனும் கொடிய இருள் நுழைந்து விட்டால் அவற்றிலிருந்து விடுபட என்ன தான் வழி, 
 காதல் சொதப்பல்..

Thursday, July 2, 2020

உயிர்

உலகில் பிறக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் என்றோ ஓர் நாள் இறப்பு ஏற்படும், 
கடவுளால் படைக்கப்பட்ட இந்த உயிரை மற்றொருவர் எடுப்பதற்கும் அனுமதி இல்லை தற்கொலை செய்ய முயற்சி செய்வதற்கும் இந்த உலகில் இடமில்லை, 
எவன் ஒருவன் மக்களை காக்க வேண்டுமோ அவன் மக்களின் உயிரை பறிக்கும் போது எந்த உலகம் அழிவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

விழிகள்


நேற்று என் வாழ்க்கையில் தனிமையை மட்டும் நேசித்த நான் இன்று அழகிய விழிகளை நேசிக்கிறேன் நீ பேச ஆரம்பித்த அந்த நொடி முதல்.

விழிகள்


உடலில் ஏற்படும் வலியை விட உள்ளத்தில் ஏற்படும் வழி தான் அதிகம்,
அந்த வலியை தான் இன்று நான் அனுபவிக்கிறேன் உன் விழியின் மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக.

விவசாயி


இவ்வுலகில் உள்ள ஜீவராசிகளின் பசியை போக்குபவன் இறைவன் என்றால் அந்த பசியை போக்க பயிரை அறுவடை செய்பவனும் இறைவன் தான்.

                🌾விவசாயி🌾

உறவுகள்

நினைத்த போது  அருகில் இருப்பவர்களை விட, உன் அருகில் இல்லாத போதும் உன்னை நினைப்பவர்களே.....உண்மையான உறவுகள்..

👍🏻👆👆👆👆👆👆👆👆👆👆

தனிமை

என் தனிமையின் மணித்துளியில்..
உன் நியாபங்கள் பனி துளி!
அழவேண்டும் போல் இருக்கிறது
அழுகைக்கும் தனிமை தேவைப்படுகிறது
தனிமையில் அழுவது இன்பம்
என்னுடைய தேடலின் முடிவு தனிமை
தனிமைக்கு தனி வலிமை உண்டு
தனிமை என்னை ஆளும் ஓர் ஆளுகை
தனிமையுடன் பேசிகொள்கிறேன்
தனிமையுடன் கைகோர்துகொள்கிறேன்
தனிமை என் தோழமை
தனிமை என் நிஜம்
தனிமை என் நிழல்
தனிமை என்னுள் கலந்திட்ட மூச்சுக்காற்று
தனிமை என் சுவாசம்
தனிமை என் நேசம்
தனிமை என் சொந்தம்
தனிமை என் பந்தம்
தனிமை எனக்கு இனிமை
தனிமை தனிமை தனிமை

உறக்கம்

உறக்கம் இல்லையெனில் 
உணர்வுகள் தடுமாறும்.....
உணர்வுகள் தடுமாறினால் 
உள்ளம் இருளாகும்.....
உள்ளம் இருளானால் 
உலகமே தடம் மாறிவிடும்...

உலகம் தடம் புரளாமல் இருக்க..
நல்லதொரு உறக்கம் கொள்வோம்..
🌹🌹🌹🌹🌹🌹

அன்பு

ஏன் என தெரியவில்லை இன்று என் மனம் எதையும் கேட்க்கும் நிலையில் இல்லாமல் என் வாழ்கையை பற்றி யோசிக்க வைக்கிறது, இது தான் நான் உன்மீது கொண்ட அன்பின் அடையாளமா..

நீ வருவாய் என

எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
அவனுக்கான
வரிகளை நித்தமும்

முற்றுப்புள்ளி இன்றி
எழுதுகிறேன்
அவனுடைய வரவை
எதிர்பார்த்தபடி

#நீ_வருவாய்_என❣

துரோகம்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றான் ஒருவன் அன்று,
ஆனால் அதே தெய்வங்களை நம்பிக்கை என்ற பெயரில் துரோகம் எனும் சிறையில் அடைகிறான் இன்று.
உன்னை பெற்றதை தவிர வேறு என்ன தவறு செய்தார்கள் அவர்கள்,

வேதனை

வலையில் சிக்கிய மீன் கூட தான் இறக்கும் தருவாயில் தன் உயிரைக் காப்பாற்ற போராடும், 
ஆனால் ஒரு சில மனிதர்கள் நடக்க போவதை மறந்து நடந்து முடிந்த ஒன்றிற்காக தன் வாழ்க்கையை அற்பணிகிறார்கள்.

அன்பு

நான் கண்ட கனவை எல்லாம் ஒரு நொடியில் உடைத்தெறிந்தாய்,
உனது அன்பு எனும் விழியில் மாட்டிக்கொண்டேன் என்ற காரணத்தால்.

நீயில்லை

திடுக்கிட்டு விழிக்கும் நடுநிசி கனவெதிலும்
நீயில்லை

உடன் சேர்ந்து முணுமுணுக்கும்
குறிப்பிட்ட பாடலிலும்
நீயில்லை

தொடுவானம் பார்த்து வரும்
ஏக்கப் பெரு மூச்சிலும்
நீயில்லை

தேநீரின் ஒற்றைக் குவளையின்
நிராசையிலும்
நீயில்லை

"நீயில்லை "என்பது
பொய்யென்பதைத் தவிர
வேறெதிலும் நீயில்லை

நட்பு

நீ தந்த பிரிவின் வலி என் இதயம் சொல்லும், என் வலி என்னவென்று கண்டும் காணாததுமாய் என்னை
 வலியில் வேகவைக்கிறது உன் மௌனங்கள்...

கவிபேசும் விழிகள்

நீ தந்த பிரிவின் வலி என் இதயம் சொல்லும், என் வலி என்னவென்று கண்டும் காணாததுமாய் என்னை
 வலியில் வேகவைக்கிறது உன் மௌனங்கள்...