Monday, July 6, 2020

《《☆ *B l a c k r o s e F a i s a l * ☆》》

நினைவுகளில்
மலர்கிறாய்
இதழ்களில்
புன்னகையால்
விரிகிறாய்
நேசத்தில்
நெஞ்சமெல்லாம்
சுவாசமாகிறாய்

நேசித்தாய்
உன்னால் என் 
உணர்வுகளும்
எனக்காகவே
ப்ரியப்பட்டது

காதல் செய்தாய்
உன் காதலுக்காகவே
என் உயிர்கூட
கொஞ்சம் அழகாக
ஒப்பனை செய்துகொண்டது

கவிதை சொன்னாய்
உன் ரசனை கேட்ட
என் வெட்கம் கூட
நிறையவே சிவந்து போனது

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
என் ஜென்மம் கூட
மீண்டும் பிறந்து
உன் காதலில்
குழந்தையாய் தவழ்ந்த போது
என்னையே நான்
படித்தேன்
எனக்குள் நீயும் கூட
ஒரு காவிய புத்தகமானாய்

இன்று உன் அனைத்துமே
எனக்குள் நினைவுகளால்
மட்டுமே நிரம்பி வழிகின்றது
நிஜத்தில் நிழல்போல்
தொடர்வேன் என்ற உன் அந்த
உயிர் வார்த்தைகள்
நான் சுவாசிக்கும்
காற்றில் கூட காண்வில்லையே

மிகவும் தொலைவில்
தொலைத்தது உன்னை
நானா...!
இல்லை நீயே என்னை தொலைத்து
சென்றாயா...?

தேடி பார்க்கின்றேன்
உன்னையும் என்னையும்
காற்றின் இடைவெளிகளிலும்
கடல் அலையின் நிறங்களிலும்....

              முற்றும்
❪❂❫━━━━━━━━‼️
《《☆ *B l a c k  r o s e  F a i s a l * ☆》》

No comments:

Post a Comment