பெண்ணே உனக்காக கட்டினேன் ஒரு காதல் கோட்டையை அதில் இதயத்தை கதவுகளாக பதித்தேன் உன் மனக் கதவு திறக்கும் என நினைத்து,
என் குருதிகளால் அழகு ஓவியங்களை வரைந்தேன் உன் விழிகள் அதை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும் என, என் நினைவுகளால் அமைதியை நிலவச் செய்தேன் எங்கே உன் மனம் என்னை வெறுத்து விட கூடாது என, என் சுவாச காற்றால் உயிரோட்டம் கொடுத்தேன் என்னை விட்டு நீ விலகி விடக்கூடாது என்பதற்காக..