---------------'-----------------------------
*சதுரங்க வேட்டை*
ஆடுபவர்: *கவிவிழியாள் காந்திமதி*
எதிரிகளைச்
சந்தித்து சிந்தித்து
விளையாடும்
விளையாட்டு..
பலமான
யானையையும் பதறாமல்
வேட்டையாடி
வீழ்த்த முடியும்..
சிப்பாய்களின் அரணும் சுழன்றுசுழன்று
அடிக்கும்
குதிரையின் வீரமும்
விளையாட்டில் ஆரம்பம்..
ராஜாவின் பாதுகாப்பும்
ராணியின் ஆக்கிரமிப்பும் விளையாட்டில் உச்சகட்டம்...
மதியை விதியால் வெல்லும்
வெற்றி தோல்வி
நம் கைகளிலே
துணிந்து *விளையாடு*
*வேட்டையாடு*
*வெற்றியோடு*
கவிஞர் கவிவிழியாள் காந்திமதி
No comments:
Post a Comment