திடுக்கிட்டு விழிக்கும் நடுநிசி கனவெதிலும்
நீயில்லை
உடன் சேர்ந்து முணுமுணுக்கும்
குறிப்பிட்ட பாடலிலும்
நீயில்லை
தொடுவானம் பார்த்து வரும்
ஏக்கப் பெரு மூச்சிலும்
நீயில்லை
தேநீரின் ஒற்றைக் குவளையின்
நிராசையிலும்
நீயில்லை
"நீயில்லை "என்பது
பொய்யென்பதைத் தவிர
வேறெதிலும் நீயில்லை
No comments:
Post a Comment