Thursday, August 6, 2020

நினைவு


வானம் சாம்பலாய் 
தெரிகிறது 
நட்சத்திரங்கள் 
அணைந்து போயின 
மலை முகடுகளில் 
முகில்கள் சாய்ந்த படி 
வெளுத்து போய்
இருந்தது. 
இவை ஏனோ என்னால் 
ரசிக்க முடியவில்லை 
உன் நினைவால்.

miss u my love


விட்டுக்
        கொடுத்து
             அவளும்

     விலகி
          நின்று
                நானும்

    காதலுக்கு
        முற்றுப்புள்ளி
            வைக்கிறோம்

   எங்கள்
      குடும்பத்திற்கா...

    ஆனால்
         முற்றுப்
              பெறாமல்

     தொடர்கிறது
           காதல்

     எங்களது
         உள்ளத்தில் ...
Miss you my love 😰😰😰

தேடல்


உனக்காகத் தான்
என் தேடல்,
உனக்காகத் தான்
என் பிறப்பு,
உன்னை பார்க்கும்
நொடிக்களுக்காக சில ஆயிரம்
தடவையாவது இறந்து
ஒரு முறை பிறப்பதற்கு
ஜென்ம ஜென்மமாய்
காத்திருக்கிறேன்...!

மலர்


நேற்று மலர்ந்த மலர் 
இன்று உதிரும் இதழ்கள் போல் உதிர்ந்து சிதறுகின்றன 
அது போலத் தான் ஒவ்வொரு ஜீவனினது ஆயுள் சுருங்கிப் போகின்றது. என் வாழ்வும் அந்த மலர்களை போல ஆகிவிடுமோ என்று நினைக்கும் போதே
உள்ளம் பதறுகிறது கண்ணீர் பீரிட்டு வருகிறது

நட்பு


என் இதயம் துடிப்பது உனக்காக தான்,
உன் இதயம் துடிக்கும் ஓசையை என்னால் கேட்க முடியவில்லை என்றாலும் என் இதயத்தால் அதை உணர முடியும் இது தான் நான் உன் மேல் கொண்ட நட்பின் அடையாளம்.

அன்பு


வாழ்க்கை கணவாகி விட்டால் நாம் வாழ்வதில் அர்த்தம் இல்லை நான் வாழ வேண்டும் என்றால் உன் இதயம் இன்னொரு இதயத்தை நேசிக்க பழக வேண்டும்,

Tuesday, August 4, 2020

நினைவுகள்


கண்ணில் கருக்கொள்ளும்
கனவுகள் என்
இதயத்தைக் குத்திக்
கிழித்திட்ட போதும்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.

நட்பு


ஆயிரம் நட்புகள் 
சுற்றியிருந்தாலும் 
மனம் தேடுவது 
நெருக்கமான 
ஒரு நட்பையே
இங்கு பலரின் 
கவலைகளும் 
புலம்பல்களும் 
வலிகளும் 
அந்த ஒரு 
நட்பிற்கானதே 
என்றால் மிகையே..

அன்பு


இதழ்கள் 
அசைக்காமல் 
உரையாடிக் 
கொண்டிருக்கிறது மனம்…

ஒரு சிரிப்பில் 
எண்ணற்ற 
துக்கங்களை 
மறைத்தது இதயம்…

இதயத்தில் 
மறைத்து வைத்துள்ள
சோகத்தை மறைக்க…

இதழ்கள் 
நடத்தும் நாடகமே சிரிப்பு!
                                    அன்பு~

நிலா


தனிமையை தேடி இரவினில் தவிக்கும் நிலா,
தான் இழந்த வாழ்க்கையை நினைத்து உருகுகின்றது..

Manam


உன்னை விட்டு ஒன்று தவரிப் போனது என்று அதிகம் கவலை கொள்ளாதே...
அதே போல் நீ நினைத்த ஒன்று உனக்கு கிடைத்தது விட்டது என அதிக இன்பமும் கொள்ளாதே!!!
நீ நினைப்பது ஒன்றும் இங்கே நடந்ததில்லை...
ஏற்கனவே இறைவனால் முடிவு செய்யப்பட்டது....
இப்பொழு நடந்து விட்டது....

Uravugal


நீ சிரிக்கும் போது 
உன்னுடன் ஆயிரம் 
உறவுகள் இருக்கும் 
ஆனால் நீ அழும் போது உன்னை நேசித்த உறவுகள் மட்டுமே இருக்கும்.

Saturday, August 1, 2020

அம்மா மற்றும் மனைவி


*ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும்.*

*உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்*

🌹✍️🌹✍️🌹

பெண்


அவள் 
கீறப்படாத 
ஓர் சித்திரம்
வரைய முடியாத 
ஓர் ஓவியம்
வாழ்க்கையில் நீங்காத
என்றும் கரைந்துபோகாத ஓர் 
சிற்பம்.

சோகம்

உன்னை நான்
என் கண்களில்
வைக்க வில்லை...
இதயத்தில்
வைத்திருக்கிறேன்...
ஆனால் நீயோ...
இதயத்தில் இருந்து
கொண்டு...
கண்களில் கண்ணீரை
வர வைக்கிறாயே...

நினைவுகள்

அன்பே
நீ 
என்னை
நினைக்க
வேண்டாம்.

நான்
எப்போதும்
உன்னை
நினைத்தே 
இருப்பேன்
என்று
நீ நினைத்தாலே
அது எனக்கு
போதும்...!!!

கவலை

இதயம் துடிக்கும் 
ஓசையை கூட
கேட்க முடியும் .... ஆனால்
மனது அழும் ஓசையை 
யாராலும் கேட்க முடியாது...
உண்மையான உறவை தவிர

நினைவுகள்

அழகே!
       நித்தம்
உனது
      நினைவுகள்
நீண்டு கொண்டே
செல்கிறதே.

      அதன்
உண்மையான
நீளம்      தான்
என்ன....?

✍️......

ஏமாற்றம்

*அன்பு காட்ட உங்களது இதயங்களில் ஈரம் இல்லா விட்டால் விட்டு விடுங்கள்..*
 *அதற்காக போலியான அன்பை உருவாக்கி* 
 *அதில் மற்றவர்களை விழ வைத்து ஏமாற்றி விடாதீர்கள்* 
 *ஏமாற்றத்தின் வலி மிக மிக கொடுமையானது...*

         😰

 *~கவிதை காதலி~*

மௌனம்

*கோபமோ வருத்தமோ* 
 *எதுவும் இல்லை..*
 *இருந்தும் மௌனம் சாதிக்கிறேன்..*
 *வீண் விவாதங்களை தவிர்க்க          எண்ணுகிறேன்..*
 *வார்தையால் மனம் காயப்படுத்துவதை விட* 
 *மௌனம் என்னவோ மேல்...*

மனம்

நதியில் விழுந்த இலையும்...
அன்பில் விழுந்த மனமும்...
ஒன்றுதான்...
இரண்டுமே கரை சேரும் வரை...
தத்தளித்து கொண்டே தான்
இருக்கும்...