Thursday, July 9, 2020

காதல்

நேசங்கள் பொய்யாவதில்லை
உண்மை இதயங்கள் 
பழகும்போது 
நம்பிக்கைகள் 
வீணாவதில்லை 
கடவுள் மீது பக்தியாகும்போது !
நீ ....
எனக்கென 
பிறந்துவிட்டாய்
நான் உனக்கெனவெ
ஜென்மங்கள் எல்லாம் 
எடுத்துவிட்டேன் 
புரிதலின் 
தெரிதலால் ....! 
காலங்கள் எல்லாம்
காதல் செய்வோம் 
ஜெகத்தினில் 
உண்மையாய் 
உயிராய் 
வாழ்வோம் 
அன்பே பிரியமுடன்

Monday, July 6, 2020

நட்பு

கவிதையை நேசிக்க நான் ஒன்றும் கவிஞன் அல்ல,
இரு விழிகளின் மேல் கொண்ட நட்பினால் கவிதையை நேசித்தேன்,
அந்த விழிகளுக்காக எழுதிக் கொண்டு இருப்பேன் என் உயிர் மூச்சு இருக்கும் வரை,
  நட்பு

காதல் பிரிவு

கவிதையை மட்டும் நேசித்த நான் காதலை நேசிக்கவில்லை என பிரிந்து சென்று விட்டாள்,
பிரிந்தவலுக்கு தெரியவில்லை நான் நேசித்த முதல் கவிதையே அவள் தான் என்று,

காதல்


மல்லிகைத் தோட்டத்தில் மலரின் வெள்ளை அழகு
மௌனத் தோட்டத்தில் உன்புன்னகை கொள்ளை அழகு
விழித்தோட்டத்தில் நீ சொல்லும் காதல் அழகு
மனத்தோட்டத்தில் நீ வந்து போவது அழகு

வசந்த கால மேகங்கள்


வானில் தவழும் மேகங்கள்
விதவிதமான 
வடிவங்கள்
மனதைக்
கவரும்
உருவங்கள். 
கடவுள் வரைந்த
ஓவியங்கள்.
கற்பனை தூண்டிடும்
காவியங்கள்.
மலரோடு
பேசிடும் முகில்கள்
முகில்களைப்
பார்த்து மகிழ்ந்திடும்
மயில்கள்.
மயில்களைப் பார்த்து
மகிழ்ந்திடும் மனிதர்கள்

சதுரங்க வேட்டை


கவிவிழியாள் காந்திமதி
---------------'-----------------------------

*சதுரங்க வேட்டை*
 
ஆடுபவர்: *கவிவிழியாள் காந்திமதி*

எதிரிகளைச்
சந்தித்து சிந்தித்து
 விளையாடும்
 விளையாட்டு..
பலமான
 யானையையும் பதறாமல் 
வேட்டையாடி
வீழ்த்த முடியும்..
சிப்பாய்களின் அரணும் சுழன்றுசுழன்று
அடிக்கும் 
குதிரையின் வீரமும்
 விளையாட்டில் ஆரம்பம்..
ராஜாவின் பாதுகாப்பும்
 ராணியின் ஆக்கிரமிப்பும் விளையாட்டில் உச்சகட்டம்...
மதியை விதியால் வெல்லும்
வெற்றி தோல்வி
 நம் கைகளிலே
துணிந்து  *விளையாடு* 
*வேட்டையாடு*
*வெற்றியோடு*

கவிஞர் கவிவிழியாள் காந்திமதி