Saturday, August 1, 2020

கவலை

இதயம் துடிக்கும் 
ஓசையை கூட
கேட்க முடியும் .... ஆனால்
மனது அழும் ஓசையை 
யாராலும் கேட்க முடியாது...
உண்மையான உறவை தவிர

நினைவுகள்

அழகே!
       நித்தம்
உனது
      நினைவுகள்
நீண்டு கொண்டே
செல்கிறதே.

      அதன்
உண்மையான
நீளம்      தான்
என்ன....?

✍️......

ஏமாற்றம்

*அன்பு காட்ட உங்களது இதயங்களில் ஈரம் இல்லா விட்டால் விட்டு விடுங்கள்..*
 *அதற்காக போலியான அன்பை உருவாக்கி* 
 *அதில் மற்றவர்களை விழ வைத்து ஏமாற்றி விடாதீர்கள்* 
 *ஏமாற்றத்தின் வலி மிக மிக கொடுமையானது...*

         😰

 *~கவிதை காதலி~*

மௌனம்

*கோபமோ வருத்தமோ* 
 *எதுவும் இல்லை..*
 *இருந்தும் மௌனம் சாதிக்கிறேன்..*
 *வீண் விவாதங்களை தவிர்க்க          எண்ணுகிறேன்..*
 *வார்தையால் மனம் காயப்படுத்துவதை விட* 
 *மௌனம் என்னவோ மேல்...*

மனம்

நதியில் விழுந்த இலையும்...
அன்பில் விழுந்த மனமும்...
ஒன்றுதான்...
இரண்டுமே கரை சேரும் வரை...
தத்தளித்து கொண்டே தான்
இருக்கும்...

Thursday, July 9, 2020

காதல்

நேசங்கள் பொய்யாவதில்லை
உண்மை இதயங்கள் 
பழகும்போது 
நம்பிக்கைகள் 
வீணாவதில்லை 
கடவுள் மீது பக்தியாகும்போது !
நீ ....
எனக்கென 
பிறந்துவிட்டாய்
நான் உனக்கெனவெ
ஜென்மங்கள் எல்லாம் 
எடுத்துவிட்டேன் 
புரிதலின் 
தெரிதலால் ....! 
காலங்கள் எல்லாம்
காதல் செய்வோம் 
ஜெகத்தினில் 
உண்மையாய் 
உயிராய் 
வாழ்வோம் 
அன்பே பிரியமுடன்