Monday, July 6, 2020

《《☆ *B l a c k r o s e F a i s a l * ☆》》

நினைவுகளில்
மலர்கிறாய்
இதழ்களில்
புன்னகையால்
விரிகிறாய்
நேசத்தில்
நெஞ்சமெல்லாம்
சுவாசமாகிறாய்

நேசித்தாய்
உன்னால் என் 
உணர்வுகளும்
எனக்காகவே
ப்ரியப்பட்டது

காதல் செய்தாய்
உன் காதலுக்காகவே
என் உயிர்கூட
கொஞ்சம் அழகாக
ஒப்பனை செய்துகொண்டது

கவிதை சொன்னாய்
உன் ரசனை கேட்ட
என் வெட்கம் கூட
நிறையவே சிவந்து போனது

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
என் ஜென்மம் கூட
மீண்டும் பிறந்து
உன் காதலில்
குழந்தையாய் தவழ்ந்த போது
என்னையே நான்
படித்தேன்
எனக்குள் நீயும் கூட
ஒரு காவிய புத்தகமானாய்

இன்று உன் அனைத்துமே
எனக்குள் நினைவுகளால்
மட்டுமே நிரம்பி வழிகின்றது
நிஜத்தில் நிழல்போல்
தொடர்வேன் என்ற உன் அந்த
உயிர் வார்த்தைகள்
நான் சுவாசிக்கும்
காற்றில் கூட காண்வில்லையே

மிகவும் தொலைவில்
தொலைத்தது உன்னை
நானா...!
இல்லை நீயே என்னை தொலைத்து
சென்றாயா...?

தேடி பார்க்கின்றேன்
உன்னையும் என்னையும்
காற்றின் இடைவெளிகளிலும்
கடல் அலையின் நிறங்களிலும்....

              முற்றும்
❪❂❫━━━━━━━━‼️
《《☆ *B l a c k  r o s e  F a i s a l * ☆》》

நிலவுமகள்

ஐஸ் கிரீம்
நீ அல்ல
நான்தான்

உன்னைக் கண்டதும்
உருகுவதால் 

சிலை
நீ அல்ல
நான்தான்

உன் எழில் கண்டு
சிலையாவதால்

மலர் 
நீ அல்ல
நான்தான்

நீ இன்றி
வாடுவதால்

மான் 
நீ அல்ல
நான்தான்

உன் கடைக்கண்
பார்வை பட்டதும்
துள்ளி ஓடுவதால்

தேன் 
நீ அல்ல
நான்தான்

என் கனவுகளுக்கு
நீ
 தீ வைப்பதால்

நிலா
நீ அல்ல
நான்தான்

காதல் எனும் களங்கம் 
என் மனதில்
உள்ளதால்

மேகம்
 நீ அல்ல
நான்தான்

உனக்காக
கண்ணீர் மழை
பொழிவதால்

கவிஞர் புதுவை குமார்

தாய்


கருவறையில் இருந்து 
    கல்லறை வரை உன்மேல் 
சுயநலமில்லாமல் காதல் 
     செய்பவள் தாய்
  தாயின்றி நீயில்லை நானில்லை பிரபஞ்சமும்
   இல்லை நீரின்றி இயங்காது பூமி தாயின்றி 
     இயங்காது குடும்பமும் 
 வாழ்வும்

பெண்

கன்னத்துக் குழியழகி
கார்குழல் கூந்தலழகி
கிளி பேச்சழகி
கீரை உடம்பழகி
குயிலின் குரலழகி
கூழாங்கல் குணத்தழகி
கெண்டைமீன் கண்ணழகி
கேள்வியின் விடையழகி
கைப்பேசி மொழியழகி
கொண்டைப் பூவழகி
கோடிகளில் நீயே அழகி
கெளரவமாக சொல்வேன்
நீதான் என் எண்ணத்தழகி*!!!!

காதல்

💞பூட்டிருக்கும் இதயத்தில்
காத்திருக்கும் கனவுகள்,
அன்பு கொண்ட என் நெஞ்சத்தில் உன் நேசத்தின் நினைவுகள்..

என்றும் அழியாத கல்வெட்டு நம் காதல்..💞

வெற்றிவிழா

கவிஞர் சங்கமம் 6
5/6/20
வெற்றிவிழா
 கவிஞர் காந்திமதி
------------------------------------------
 கவிதையின் தலைப்பு।    *வெற்றி விழா*


சுற்று முற்றும்
 சிந்தையைக் கவரும்
முத்து முத்தான
 கவிதைச் சரங்களே!
உன்பிறப்பு எண்ணில்
அடங்காத் தொகுப்பு!
தினமும் கொடுக்கப்படும் 
 புதுப்புது *தலைப்பு*!
எங்கள் உள்ளத்
தவிப்புகளின் *பிரதிபலிப்பு!*
 உன்னால் உருவானோம் நாங்கள்!
எங்களால் உருவானாய் நீ !
உன் புகழை
தினம் பாடி
கவிமாலை தீட்டி
 பாமாலை சூட்டி
*வெற்றி விழா* 
காண வாழ்த்துகிறோம்!
வாழ்க கவிஞர் சங்கமம்!
 வளர்க கவிஞர்கள்!!
--------------------------------------------
கவிஞர் கவிவிழியாள் காந்திமதி