Thursday, August 6, 2020

நட்பு


என் இதயம் துடிப்பது உனக்காக தான்,
உன் இதயம் துடிக்கும் ஓசையை என்னால் கேட்க முடியவில்லை என்றாலும் என் இதயத்தால் அதை உணர முடியும் இது தான் நான் உன் மேல் கொண்ட நட்பின் அடையாளம்.

அன்பு


வாழ்க்கை கணவாகி விட்டால் நாம் வாழ்வதில் அர்த்தம் இல்லை நான் வாழ வேண்டும் என்றால் உன் இதயம் இன்னொரு இதயத்தை நேசிக்க பழக வேண்டும்,

Tuesday, August 4, 2020

நினைவுகள்


கண்ணில் கருக்கொள்ளும்
கனவுகள் என்
இதயத்தைக் குத்திக்
கிழித்திட்ட போதும்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.

நட்பு


ஆயிரம் நட்புகள் 
சுற்றியிருந்தாலும் 
மனம் தேடுவது 
நெருக்கமான 
ஒரு நட்பையே
இங்கு பலரின் 
கவலைகளும் 
புலம்பல்களும் 
வலிகளும் 
அந்த ஒரு 
நட்பிற்கானதே 
என்றால் மிகையே..

அன்பு


இதழ்கள் 
அசைக்காமல் 
உரையாடிக் 
கொண்டிருக்கிறது மனம்…

ஒரு சிரிப்பில் 
எண்ணற்ற 
துக்கங்களை 
மறைத்தது இதயம்…

இதயத்தில் 
மறைத்து வைத்துள்ள
சோகத்தை மறைக்க…

இதழ்கள் 
நடத்தும் நாடகமே சிரிப்பு!
                                    அன்பு~

நிலா


தனிமையை தேடி இரவினில் தவிக்கும் நிலா,
தான் இழந்த வாழ்க்கையை நினைத்து உருகுகின்றது..